வீடுகளில் வெடிக்கும் கேஸ் சிலிண்டர்- இன்றும் மற்றொரு வெடிப்பு சம்பவம்

கேஸ் சிலிண்டர் வெடிப்பு செய்தி - Today breaking news in Tamil

கொட்டாவ, பன்னிபிட்டிய பகுதியில் உள்ள வீடொன்றில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று அதிகாலை இந்த வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எரிவாயு கசிவு (கேஸ் சிலிண்டர்) காரணமாக இந்த வெடிப்பு சம்பவம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

வெடிப்பு சம்பவத்தில் வீட்டிற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் வீட்டில் இருந்தவர்களுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இம்மாதத்தில் பதிவாகியுள்ள 4 ஆவது வெடிப்பு சம்பவம் (கேஸ் சிலிண்டர் வெடிப்பு) இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் வீடுகளில் உள்ள எரிவாயு சிலிண்டர்கள் வெடிக்கும் ஆபத்தான நிலையில்