கொவிட் தடுப்புக்காக இன்று ஜனாதிபதி வழங்கியுள்ள விஷேட ஆலோசனை

கொரோனா தடுப்பு குறித்து ஜனாதிபதியின் ஆலோனை

இரண்டு கொவிட் தடுப்பூசிகளையும் பெற்று 03 மாதங்கள் பூர்த்தியான 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் நடமாடும் சேவை மூலம் மூன்றாவது (பூஸ்டர்) தடுப்பூசியை வழங்குமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இன்று (26) இடம்பெற்ற கொரோனா தடுப்பு  செயலணி கூட்டத்தில் ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இரண்டு கொவிட் தடுப்பூசிகளையும் பெற்று ஒரு மாதம் பூர்த்தியான 20 வயதுக்கு மேற்பட்ட தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் மூன்றாவது கொவிட் தடுப்பூசி செலுத்துமாறும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொவிட் நோயாளர்களுக்கு வாய் வழியாக வழங்கப்படும் ‘மொனுபிரவீர்’ என்ற மருந்தை நாட்டுக்கு இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

கொவிட் தடுப்பூசிகளை கொண்டுவந்தது போன்றே, அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் ஊடாக இந்த வில்லைகளையும் நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு, இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமனவுக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.