​கொவிட் நான்காவது அலை? பொது மக்களுக்கு புதிய எச்சரிக்கை

கோவிட் அலை நான்காவது? Today breaking news in Tamil

டிசம்பரில் இலங்கை நான்காவது கோவிட் அலை க்கு முகம் கொடுக்கக்கூடும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண (Channa Jayasumana) எச்சரித்துள்ளார்.

அனுராதபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே கோவிட் தொற்றுகள் சிறிதளவு அதிகரித்துள்ளதாக உற்பத்தி, வழங்கல் மற்றும் மருந்துப் பொருட்கள் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அவ்வாறு இல்லாது போனால் இலங்கை நான்காவது அலையிலிருந்து தப்பிக்க முடியாது என பேராசிரியர் சன்ன ஜயசுமண எச்சரித்துள்ளார்.

டிசம்பரில் உலகம் கோவிட் தொற்றின் நான்காவது அலை யை எதிர்கொள்ளத் தயாராகி வருவதாகவும், இது தொடர்பாக இலங்கையும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், நாடு ஒருபோதும் வைரஸால் பாதிக்கப்படாதது போல் பொதுமக்கள் நடந்துகொள்வதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்த அவர், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பாதுகாப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.