சிலிண்டர் வெடிக்க காரணம் என்ன? எரிவாயு கசிவை கண்டுபிடிக்க புதிய கருவி

சிலிண்டர் வெடிக்க காரணம் Today breaking news in Tamil

கடந்த சில நாட்களாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து எரிவாயு கசிவு காரணமாக கேஸ் சிலிண்டர் வெடிப்பு கள் பல ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எரிவாயுக் கசிவு ஏற்பட்டால், முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் இதுபோன்ற கடுமையான விபத்துகளைத் தடுக்கலாம்.

அதன்படி, எரிவாயு கசிவைக் கண்டறிய உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சாதனம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிவாயு கசிவைக் கண்டறியும் கருவிகள் பொதுவாக உலகின் ஏனைய பகுதிகளில் பயன்படுத்தப்பட்டாலும், இலங்கையில் இன்னும் பரவலாகக் கிடைக்கவில்லை.

´லைஃப்´ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சாதனம் நாட்டிலேயே முதல் எரிவாயு கசிவைக் கண்டறியும் கருவியாகும்.

எபிக் குழுமத்தின் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்பு பிரிவின் திட்டத்திற்கு பொறுப்பான தலைமை பொறியியலாளர் சானக தென்னகோன் தெரிவிக்கையில்,

வாயு கசிவினை கண்டுபிடிக்கும் சாதனம் என்ற போதும் இது தீப்பிடிக்கும் எந்தவொரு விடயத்திற்கும் செயற்படும். இதனை இணையத்துடன் தொடர்பு படுத்த முடியும்.

இதன் காரணமாக விபத்து ஒன்று ஏற்பட்டால் கைப்பேசிக்கு எச்சரிக்கை செய்தி வரும். இது, வாயு, வெப்பநிலை மற்றும் புகை போன்றவற்றை உணரக்கூடியது.”

சிலிண்டர் வெடிக்க காரணம் – கேஸ் சிலிண்டர் ஏன் வெடிக்கிறது?

இன்று நம் அனைவர் வீட்டிலும் பயன்படும் முக்கியமான பொருட்களில் ஒன்றாகிவிட்டது கேஸ் சிலிண்டர். சில நேரங்களில் நமது கவனக்குறைவால் கேஸ் சிலிண்டர் வெடிக்கும் அபாயம் ஏற்படுகிறது.

கேஸ் சிலிண்டர் வெடிக்க முக்கியமான காரணம் என்ன? கேஸ் சிலிண்டர் ஏன் வெடிக்கிறது?
அதை எப்படி தடுப்பது? வாங்க பாக்கலாம்.

இரவு நேரங்களில் கேஸ் சிலிண்டரை பயன்படுத்திவிட்டு ரெகுலேட்டரை ஆப் செய்யாமல் தூங்க சென்றுவிடுகிறோம். அவ்வாறு ரெகுலேட்டரை ஆப் செய்யாமல் செல்வது தவறு. இதன் மூலம் கேஸ் லீக்காக வாய்ப்புள்ளது.

கேஸ் சிலிண்டரின் உள்ளே இருக்கும் புரோப்பேன் (Propane), பூட்டேன் (Butane) ஆகியவை திரவ வடிவில்தான் இருக்கும்.

இவைதான் நமக்கு அடுப்பு வழியாக கேஸாக வெளியே வருகிறது. சிலிண்டரில் இருந்து கேஸ் லீக் ஆகும்போது அதனை நமக்கு உணர்த்த மெர்கேப்டன் என்ற திரவம் சேர்க்கப்பட்டிற்கும். இது ஒருவிதமான வாடையை உருவாக்கி கேஸ் லீக்காவதை நமக்கு உணர்த்தும்.

கேஸ் பயன்படுத்தும் பலரும் செய்யும் மிகப்பெரிய தவறுகளில் ஓன்று கேஸ் அடுப்பில் பால் அல்லது சமையல் பாத்திரத்தை வைத்துவிட்டு வேறு வேலைகளை பார்க்க சென்றுவிடுவார்கள்.

பால் பொங்கி கீழே வழியும் போது அது அடுப்பில் பட்டு தீயை அனைத்துவிடும். ஆனால், கேஸ் வெளியேறிக்கொண்டுதான் இருக்கும்.

இவ்வாறு அதிக அளவில் வெளியாகும் கேஸ் வீடு முழுவதும் பரவி விபத்தை உண்டாக்குகிறது. கிச்சனில் ப்ரிட்ஜ், மைக்ரோவோன் போன்ற பொருட்களை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. அதில் இருந்து வெளியேறும் ஒருசில ஸ்பார்க் கேஷில் பட்டு விபத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

கேஸ் சிலிண்டரை மரப்பெட்டி இவற்றில் பூட்டி வைப்பது தவறு. கேஸ் லீக் ஆனால் நமக்கு தெரியாமல் போக வாய்ப்புள்ளது. எரிவாயு நிறுவனத்தில் கொடுக்கும் ரெகுலேட்டர், டியூப்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

அதில் பிரச்னை எதுவும் ஏற்பட்டால் புதிதாக வாங்கிக்கொள்ள வேண்டும்.

சாதாரண கடைகளில் கிடைக்கும் தரமற்ற டியூபுகளை பயன்படுத்துவதனால் கூட கேஸ் லீக்காக அதிக வாய்ப்புள்ளது.

மேலும் தமிழ் செய்திகள் இன்று