வௌியானது அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று

சீனி விலை தொடர்பான வர்த்தமானி இரத்து Today news in Tamil

சீனி விலை மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவது குறித்த அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று நள்ளிரவு வௌியிடப்பட்டுள்ளது.

இதன்படி, செப்டம்பர் 2ம் திகதி அமுல்படுத்தப்பட்ட சீனிக்கான கட்டுப்பாட்டு விலைகள் நீக்கப்பட்டுள்ளன.

இதேவேளை சீனி க்கான கட்டுப்பாட்டு விலை அரசாங்கம் நீக்கினாலும் லங்கா சதொச தொடர்ந்தும் அதே விலையில் சீனியை விற்பனை செய்யும் என லங்கா சதொச தலைவர் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ், இன்று (03) பிற்பகல் தெரிவித்தார்.

ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனி 122 ரூபாயாகவும், ஒரு கிலோ பழுப்பு சீனி 125 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படும் என்று குறிப்பிட்டார்.

துறைமுகத்தில் இருந்து பெறப்பட்ட ஆயிரம் மெற்றிக் தொன் வெள்ளை சீனி அடுத்த சில நாட்களில் சதொச விற்பனை நிலையங்களுக்கு கையளிக்கப்படும் என பீரிஸ் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *