சீமெந்து விலை மீண்டும் அதிகரித்தது – புதிய விலை விபரம்

சீமெந்து விலை அதிகரிப்பு - Tamil news in online | Ceylon Nation

சீமெந்து விலை அதிகரிப்பு – சீமெந்துக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதன் பின்னர், சீமெந்து மூடை ஒன்றின் விலையை 1, 275 ரூபாய் வரை அதிகரிப்பதற்கு சீமெந்து உற்பத்தியாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

சில சீமெந்து நிறுவனங்கள், ஒரு மூடை சீமெந்தின் விலையை, 1,375 ரூபாய் வரை அதிகரித்துள்ளன.

இதேவேளை, 1375 ரூபாய் வரை சீமெந்தின் விலையை அதிகரித்துள்ள நிறுவனங்கள், மூடை ஒன்றுக்கு 100 ரூபாய் குறைப்பதற்கு இணக்கம் தெரிவித்திருந்தன என நுகர்வோர் பாதுகாப்பு விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அழகிய வண்ண தெரிவித்தார்

கடந்த ஒக்டோபர் தொடக்கத்தில் சீமெந்து பொதியொன்றின் விலை 93 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 1,093 ரூபா என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே தற்போது இரண்டாவது தடவையாக சீமெந்து பொதியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.