சீரற்ற காலநிலையால் 20 பேர் உயிரிழப்பு – பலரை காணவில்லை

சீரற்ற காலநிலையால் 20 பேர் உயிரிழப்பு - பலரை காணவில்லை

சீரற்ற காலநிலை காரணமாக, மரணித்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்வடைந்துள்ளது. இதனை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கேகாலை − ஹத்னாகொட பகுதியிலுள்ள வீடொன்றின் மீது மண்மேடொன்று சரிந்து வீழ்ந்துள்ளது.

இந்த அனர்த்தத்தில் மூவர் மரணமடைந்துள்ளனர், மூவர் மண்ணில் புதையுண்டுள்ளனர் ஒருவர் காப்பாற்றப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

மேலும், அனர்த்தத்தில் இருவர் காணாமல் போயுள்ளதாகவும், மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நிலையம் கூறுகின்றது.

இதுதவிர குருணாகல் – உடுபெத்தாவ பிரதேசத்தில் வெள்ளம் காரணமாக இருவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.