இன்று முதல் அமுலுக்கு வரும் புதிய சுகாதார வழிகாட்டல்

சுகாதார வழிமுறைகள் வௌியானது Today breaking news in Tamil

இன்று (16) முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை பொதுக்கூட்டங்கள், ஒன்று கூடல்கள் மற்றும் களியாட்டங்களுக்கான புதிய கட்டுப்பாடுகள் அடங்கிய சுகாதார வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அந்த வகையில் பொதுக்கூட்டங்கள், ஒன்றுகூடல்கள் மற்றும் விழாக்களுக்கு மறு அறிவித்தல் வரை அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு மேற்கொள்வதற்கு உரிய அதிகாரத்தை கொண்ட தரப்பிடமிருந்து அனுமதி பெற வேண்டுமெனவும் என புதிய சுகாதார வழிகாட்டல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், திருமண நிகழ்வுகளின் போது, திருமண மண்டப கொள்ளளவில் மூன்றில் ஒரு பகுதியளவிலும், 100க்கு மேற்படாத வகையிலும் நபர்கள் ஒன்றுகூட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும், திருமண வைபவங்களில் மதுபான விருந்துபசாரங்கள் நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், மரண வீடுகளில், ஒரு சந்தர்ப்பத்தில் ஆகக்கூடியது 20 பேருக்கு மாத்திரமே பங்குபற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் கண்காட்சி மற்றும் மாநாடு என்பவற்றை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கல்வி பொது தராதர சாதாரண தர மற்றும் உயர்தர வகுப்புக்களுக்கான தனியார் வகுப்புகளை மண்டப கொள்ளளவில் 50 சதவீதமானவர்களின் பங்கு பற்றலுடன் நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய சுகாதார வழிக்காட்டலுக்கமைய திரையரங்குகளுக்கு ஐம்பது சதவீதமானோரை அனுமதிக்க முடியும்.

இந்த எண்ணிக்கை இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட சுகாதார வழிகட்டலில் 25 சதவீதமாகக் காணப்பட்டது.

சுகாதார வழிமுறைகள் களை மீறுவோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.