பாழடைந்த வீட்டில் இருந்து மீட்கப்பட்ட தலை தொடர்பில் வௌியான செய்தி

டாம் வீதி பெண்ணின் தலையா? Today breaking news in Tamil

படல்கும்புர – பஸ்ஸர பிரதான வீதியின் அழுபொத்த பிரதேசத்தில் மனித தலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

11 கிலோ மீற்றருக்கு தொலைவில் பாழடைந்த வீட்டில் இருந்து இந்த தலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பு – டாம் வீதி வெல்லவீதி பிரதேசத்தில் பயணப்பையில் தலையின்றி மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் மற்றும் இந்த மனித தலைக்கும் இடையில் தொடர்பு உள்ளதா என ஆராய்ந்து பார்ப்பதற்கு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் படல்கும்புர பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதனால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் சிரேஷ்ட பேச்சாளர் தெரிவித்துள்ளார்.