தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம் – மீண்டும் உச்சம் தொடும் நிலை

தங்கம் விலையில் மீண்டும் மாற்றம் - Today breaking news in Tamil

உலக அளவில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை விரைவில் 1,900 அமெரிக்க டொலர்வரை அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி போன்ற பொருட்களின் கேள்வி அதிகரித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2 சதவீதம் உயர்ந்துள்ளது.

அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கம் 1,862.97 அமெரிக்க டொலர்களில் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், இந்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலையில் இதுவரை குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது இலங்கை சந்தையில் 22 கெரட் தங்க பவுணின் விலை 109,200 ரூபாவாகவும், 24 கெரட் தங்க பவுணின் விலை 118,000 ரூபாவாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.