தடுப்பூசி போட்டவர்கள் கூட உயிரிழக்கின்றனர் – மீண்டும் நாட்டை முடக்க நேரிடும்

தடுப்பூசி போட்டவர்கள் கூட உயிரிழக்கின்றனர் - News in Tamil

தற்போது நாட்டில் நாளாந்தம் 600க்கும் மேற்பட்ட கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன், இவ்வாறு கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் மீண்டும் நாட்டை முடக்க நேரிடும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் மீண்டும் நாடு முடக்கப்பட்டால் நாளாந்த கொடுப்பனவை பெறுபவர்கள் மாத்திரமல்லாது மாதாந்த கொடுப்பனவை பெற்றுக் கொள்பவர்களும் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.

கொவிட் தடுப்பூசி போட்டவர்கள் கூட தற்போது கொவிட் தொற்று உள்ளாவதுடன், தடுப்பூசி போட்டவர்கள் உயிரிழக்கும் சாத்தியமும் காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனால் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி, கொவிட் பரவலைக் கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கோரியுள்ளார்.