தேங்காய்க்கும் தட்டுப்பாடு? விலையும் அதிகரிப்பு

தேங்காய் விலை உயர்வு தமிழ் செய்திகள் இன்று | Ceylon Nation

சந்தையில் தற்போது தேங்காய்க்கு தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் தேங்காய்க்கான தட்டுப்பாடு நிலவுவதாக வர்த்தக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர் மழை காரணமாக தேங்காய் மட்டையை அகற்றுதல் மற்றும் போக்குவரத்து பாதிப்பு போன்ற காரணங்களால் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தேங்காய் தட்டுப்பாடு காரணமாக தேங்காய் விலை யும் சடுதியாக உயர்வு அடைந்துள்ளது.

இதன்படி கொழும்பு மாவட்டத்தில் தேங்காய் விலை ஒன்று 100 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.