மாதாந்தம் தேநீருக்கு 2 இலட்சத்து 90 ஆயிரம் செலவிடும் அமைச்சர்

தேநீர் செலவுக்கு இலட்சம் செலவிடும் அமைச்சர் - News in Tamil

ஒரு குடும்பம் வாழ ஒரு மாதத்துக்கு 2 ஆயிரத்து 500 ரூபா போதும் எனத் தெரிவித்த வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவின் மாதாந்தத் தேநீர் செலவு மட்டும் 2 இலட்சத்து 90 ஆயிரம் ரூபா என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. துஷார இந்துனில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ஒதுக்கீட்டு சட்டமூல திருத்த இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

“வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன முதலில் தனது அலுவகலகத்தைச் சதொச கட்டடத்தின் மேல் மாடியில் அமைத்திருந்தார். பின்னர் அதில் திருப்தி அடையாமல் தந்து அலுவலகத்தைக் காலி வீதிக்கு மாற்றினார்.

அந்தக் கட்டடத்தின் மாத வாடகை மட்டும் 80 இலட்சம் ரூபா. வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன ஒரு குடும்பம் வாழ ஒரு மாதத்துக்கு 2 ஆயிரத்து 500 ரூபா போதும் எனக் கூறியிருந்தார்.

ஆனால், அவரின் அலுவலகக் கட்டடத்தின் மாத வாடகை மட்டும் 80 இலட்சம் ரூபா. அதுமட்டுமன்றி அமைச்சர் பந்துலுவின் மாதாந்த தேநீர் செலவு மட்டும் 2 ஆயிரத்து 90 ஆயிரம் ரூபா என்றும் தெரிவித்துள்ளார்.