தீர்வு கிடைக்கும் வரை மின்சார சபை ஊழியர்கள் எடுத்துள்ள தீர்மானம்

தொழிற்சங்க போராட்டத்தில் மின்சார சபை ஊழியர்

தாம் முதற்கட்ட நடவடிக்கையையே ஆரம்பித்துள்ளதாகவும் மேலும் இரண்டு வழிமுறைகள் தங்களது சங்கத்தால் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் ‘சட்டப்படி வேலை செய்யும்’ தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் எச்சரித்துள்ளது.

அரசாங்கத்திற்கு சொந்தமான யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதியை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கும் உடன்படிக்கைக்கு எதிராகவும், மின்சார சபையில் நிலவும் பிரச்சினைகளை முன்னிறுத்தியும் இந்த ‘சட்டப்படி வேலை செய்யும்’ போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

நேற்று(25) நண்பகல் முதல் இந்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

தங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கபெறும் வரையில் இந்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வேதன பிரச்சினை உள்ளிட்ட பல்வேறுப்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார தொழிற்சங்கம் ஆரம்பித்துள்ள 48 மணி நேர அடையாளப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று காலை 7 மணியுடன் நிறைவடைந்தது.