வௌிநாடுகளுக்கு வேலைக்கு செல்ல எண்ணியுள்ளவர்களுக்கு ஒரு அறிவித்தல்

தொழில் செய்ய வௌிநாடு செல்வோருக்கு ஒரு செய்தி

தொழில் செய்ய வெளிநாடு செல்லும் போது, ​​வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்துவிட்டு செல்லுமாறு பணியகம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த முறையின் கீழ் வெளிநாடு செல்வதன் மூலம் பிற்காலத்தில் ஏற்படக்கூடிய பல பிரச்சனைகள் தீர்வு கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாமல் வெளிநாடுகளுக்கு வேலைக்காக சென்று பல்வேறு பிரச்சினைகளுக்குள்ளாகும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

எப்படியிருப்பினும் முறையாக பதிவு செய்யாமல் தொழில் செய்ய வௌிநாடு செல்வதன் காரணத்தினால் பிரச்சினைக்குள்ளாகும் மக்களுக்கு உதவ முடியவில்லை என பணியகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடுகளுக்கு சென்று பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பவர்களுக்கும், அங்கு வாழ்வை இழக்கும் இலங்கையர்களுக்காகவும் விசேட காப்புறுதித் திட்டம் நடைமுறையில் உள்ளது.

எப்படியிருப்பினும், பதிவு செய்யாமல், வெளிநாட்டில் வேலைக்காக சென்று, பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாகுபவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.