நாடு முழுவதும் மின் வெட்டு அமுலாகுமா?

நாடு முழுவதும் மின்வெட்டு அமுலாகுமா? Today news in Tamil

அந்நியச் செலாவணி நெருக்கடிக்கு மத்தியில், நாடு முழுவதும் மின்வெட்டு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லையென எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக நாடு முழுவதும் மின்வெட்டு அமுலாகும் சூழல் ஏற்பட்டிருப்பதாக ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

எரிபொருளைக் கொள்வனவு செய்ய முடியாது போனால், நாட்டில் மின்சாரத் தடை ஏற்படும் எனத் தெரிவித்த முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எம்.பி, இதனால் நாட்டின் பொருளாதாரம் பாரியவில் பாதிக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

இந்த விவாதத்தில் சபாநாயகர் மற்றும் அவைத்தலைவர் அமைச்சர் தினேஸ் குணவர்தன ஆகியோரும் தலையிட்டனர்.

பாதீடு மீதான குழுநிலை விவாதம் இன்று 6ஆவது நாளாகவும் நடைபெற்றுவரும் நிலையில், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்களின் செலவினத் தலைப்புகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.