இரண்டு தடுப்பூசிகள் செலுத்திய 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான அறிவிப்பு

பூஸ்டர் தடுப்பூசி நாளை ஆரம்பம் - Today breaking news in Tamil

60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது கொவிட் தடுப்பூசி (பூஸ்டர்) செலுத்தும் நடவடிக்கை நாளை (17) முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, அனுராதபுரம், அம்பாறை மாவட்டங்களிலும், மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதலாவதாக மூன்றாவது தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது தடுப்பூசியை செலுத்தி மூன்று மாதங்கள் நிறைவடைந்தவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.