அபாயகரமான பகுதியில் இருந்து வௌியேற மறுத்தால் இதுதான் நடக்கும்

மண்சரிவு அபாயம் - வௌியேற மறுத்தால் இதுதான் நடக்கும்

மண்சரிவு ஏற்படும் அபாயமுள்ள பிரதேசங்களிலிருந்து வெளியேற மறுப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

காவல்துறை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் ஊடாக மண்சரிவு அபாயமுள்ள பிரதேசங்களில் உள்ளவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.