சிகரெட் மற்றும் மதுபான விலைகள் உடனடியாக அதிகரிப்பு

மதுபான விலை உயர்வு - வரவு செலவுத் திட்டம் 2022

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சிகரெட்டுக்கான வரியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி சிகரெட் ஒன்றுக்கான விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் பாதீட்டை சமர்ப்பித்து தெரிவித்துள்ளார்.

அத்துடன், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மது வரியும் அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

25 மில்லியன் ரூபா வருமானத்தை எதிர்பார்த்து இது நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று பிற்பகல் வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.