பிரதமர் மஹிந்தவும் வெறுப்பில் – அவரின் மனசாட்சி வெளியில் வந்துள்ளது

மஹிந்த ராஜபக்ஷவும் வெறுப்பில் - Today breaking news in Tamil

தான் மாத்திரமல்லாது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் வெறுப்படைந்து இருப்பதாக அமைச்சர் விமல் வீரவன்ச (Wimal Weerawansa) தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 5 வது ஆண்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் மூலம் அவரது மனசாட்சி வெளியில் வந்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

அந்த உரையில் பிரதமர் செல்லும் பயணத்தில் தன்னால் முடிந்த குறைப்பாடுகளை மஹிந்த ராஜபக்ஷவும் சுட்டிக்காட்டியுள்ளார். பிரதமரால் கூற முடியாத கதையும் உள்ளது. தற்போதைய அரசாங்கத்திற்கு இன்னும் மூன்று ஆண்டுகள் காலம் இருக்கின்றது.

அது மிகவும் சவால்மிக்க காலம். பொதுஜன பெரமுன மற்றும் அதன் கூட்டணிக் கட்சிக்கு இடையில் முரண்பாடுகள் ஏற்படாத வகையில் அனைவரும் இணங்க கூடிய வகையில் செயற்பட முடிந்தால், அந்த சவாலை வெற்றிக்கொள்ள முடியும்.

அப்படி இல்லை என்றால், பூமி அதிர்ச்சி ஏற்படும் போது அருகில் உள்ள வங்கியை உடைக்க தயாரானது போல் நடந்தால், பூமி அதிர்ச்சி மாத்திரமல்ல, வங்கியும் உடைக்கப்படுகிறது என்று சத்தமிட நேரிடும் என்பதை அரசாங்கத்திற்குள் மோதல்களை ஏற்படுத்த முயற்சிக்கும் தரப்பினர் புரிந்துக்கொள்ள வேண்டும் எனவும் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார். வாராந்த செய்தித்தாள் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் வீரவங்ச இதனை குறிப்பிட்டுள்ளார்.