மாகாண சபைகள் இல்லாமால் செய்யப்பட வேண்டும்

மாகாண சபை முறைமை நீக்கப்பட வேண்டும் - News in Tamil

மாகாண சபை முறைமை இல்லாது ஒழிக்கப்பட வேண்டும் எனத் தேசிய காங்கிரசின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லா நேற்று (24) நாடாளுமன்றில் கோரியுள்ளார்.

மாகாண சபை முறைமை ஆனது நாட்டின் பொருளாதாரத்துக்குச் சுமையாகும். மக்களின் பணம் இதனூடாக வீணடிக்கப்படுகிறது. தமிழர்கள் என்றாலும் முஸ்லிம்கள் என்றாலும் நீண்டகாலமாக தங்களுடைய உரிமைகளுக்காகப் போராடிவருகிறார்கள்.

ஆனால் அதற்கு ஒரு முறைமை இருக்கிறது. மாகாண சபை முறைமையை இல்லாதொழித்து, புதிய அரசியல் யாப்பு ஒன்றைக் கொண்டுவர வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இன்றைய இலங்கை செய்திகள்

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக நாட்டுக்கு வழங்கப்பட்ட மாகாணசபைகள், நாட்டுக்கு பெரும் சுமையாக இருப்பதாக தெரிவித்த அரசாங்க ஏ. எல். எம். அதாஉல்லா, புதிய அரசமைப்பின் ஊடாக மாகாண சபைகள் இல்லாதொழிக்கப்பட வேண்டும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

தமிழர்களுக்கு தேவையானதை வழங்க முடியுமாக இருந்தால், முஸ்லிம்களின் பிரச்சினைகள் உள்ளிட்ட நாட்டில் பெரும்பான்மையாக வாழும் சிங்கள மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியுமாக இருந்தால் எதற்காக நாட்டில் மாகாணசபைகள்? எனவும் கேள்வி எழுப்பினார்.

ஒரே நாடு, ஒரே சட்டம் என்கிறார்கள். ஆனால், மாகாண சபைகளில் 10 சட்டங்கள் இருக்கின்றன. மாகாண சபைகளை இல்லாதொழித்து நாட்டுக்கு தேவையான சிறந்த அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கேட்டுகொண்டார்.

பிரித்தானியர் காலத்தில் இருந்து நாட்டிலுள்ள அனைத்து இனங்களுக்கு அரசியலமைப்பு ஊடாக உரிமைகள் பகிரப்பட்டுள்ளன என குறிப்பிட்டார்.