நாடு முழுவதும் இரண்டு நாள் மின் துண்டிப்பு போராட்டம் குறித்த இறுதித் தீர்மானம்

மின் துண்டிப்பு போராட்டம் - Today breaking news in Tamil

நாளை மற்றும் நாளை மறுதினங்களில் நாட்டு மக்கள் இருளில் இருக்க நேரிடும் என அண்மையில் அறிவித்த மின்சார சேவையாளர்கள் சங்கத்தினர், மின் துண்டிப்பு போராட்டம் தொடர்பான தமது இறுதி தீர்மானத்தை நாளை (03) அறிவிக்க உள்ளனர்

இலங்கை மின்சார சேவையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜயலால் இதனைத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார்.

மின் துண்டிப்பு போராட்டம் மேற்கொள்ளாது தொழிற்சங்க நடவடிக்கையில் மாத்திரம் ஈடுபடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் தங்களது தொழிற்சங்கத்தினர் இல்லாவிட்டால் மின்சார விநியோக நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல முடியாதென இலங்கை மின்சார சேவையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜயலால் எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *