கடுங் கோபத்தில் மைத்திரிபால – அரசாங்கத்துக்கு காரசாரமான பதிலடி: Sri Lanka News Tamil Today

மைத்திரிபால கடும் கோபத்தில் - Today breaking news in Tamil

அரசாங்கத்தின் பிரதான பங்காளியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மீது, ஆளும் தரப்பின​ரே பொய்யான குற்றச்சாட்டுகளை கடுமையான முறையில் முன்வைக்கின்றனர் எனத் தெரிவித்தார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எம்.பி.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்திருந்தால் தான் அரசாங்கத்துக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும் என ஞாபகமூட்டினார்.

சுதந்திரக் கட்சியின் மீது சேறுபூசும் செயற்பாடுகள் பாரதூரமானவை என்றும் நினைவூட்டிய அவர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 14 பேர், அரசாங்கத்துக்குள் இருப்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் என அரசாங்கத்துக்கு நினைவூட்டினார்.

அத்துடன், தான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் பயன்படுத்திய வாகனங்கள் தொடர்பிலான அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே முன்வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்துக்கும் கடுந்தொனியில் பதிலளித்தார்.

அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் தான் மூன்றில் இரண்டு பங்கு அதிகாரம் இருப்பதாகவும் அவர் கூறினார்.

வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பாராளுமன்றத் தில் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார்.

Sri Lanka News Tamil Today – தமிழ் செய்திகள் இன்று