மைத்திரிபால சிரிசேனவின் அதிரடி அறிவிப்பு

மைத்திரிபால சிரிசேன அதிரடி அறிவிப்பு - breaking news in Tamil

தன்மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால், பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் துறப்பேன் என, முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மைத்திரிபால சிரிசேன, பாராளுமன்றத்தில் இன்று (11) தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (10) உரையாற்றியிருந்த அமைச்சர் மஹிந்தனந்த அளுத்கமகே, “ மைத்திரிபால சிரிசேன, ஜனாதிபதி பதவியில் இருக்கும் போது, கொழும்பில் மூன்று வீடுகளை நிர்மாணித்துகொண்டார்” என அமைச்சர் மஹிந்தனந்த குற்றஞ்சாட்டியிருந்தார்.

நாட்டின் ஜனாதிபதி ஒருவா் ஓய்வு பெற்ற பின்னா், அவருக்கு அமைச்சா் ஒருவருக்குரிய வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் தாம், இன்று வசிப்பது அமைச்சா் ஹெகலிய ரம்புக்வெல்ல வசித்த வீடாகும் என்றும் அவர் தெரி வித்துள்ளார்.