மின்சார மானியம் குறைப்பு; சலுகைகளை அறிவித்தார் பசில் ராஜபக்ஷ

வரவு செலவு திட்டம் 2022 - Today breaking news in Tamil

2022 வரவு செலவு திட்டம் சௌபாக்கிய நோக்கினை முழுமையாக கருத்திற் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

* புதிய அரச அலுவலகங்களின் நிர்மாணப் பணிகள் 2 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

* அரச நிறுவனங்களின் தொலைப்பேசி செலவீனங்கள் நூற்றுக்கு 25 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற ஓய்வூதியம் கிடைக்கப்பெற வேண்டுமாயின் புதிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவராக 10 வருடங்கள் கடமையாற்றி இருக்க வேண்டும். இதில் ஜனாதிபதி பதவி உள்ளிட்ட அனைவரும் அடங்குவர்.

அரச உத்தியோகத்தர்களுக்கான எரிபொருள் மானியம் 5 லீற்றரால் குறைப்பு..

சூரிய சக்தியை ஊக்குவிக்கும் வகையில், மின்சார மானியத்தை 10% இனால் குறைக்கவும் யோசனை

கொரோனா முடக்க காலத்தில் வருமானத்தை இழந்த பாடசாலை வாகன உரிமையாளர்களுக்கு நிவாரணம் அளிக்க, 400 மில்லியன் ஒதுக்கீடு

* வருமானத்தை இழந்த ஓட்டோ சாரதிகளுக்கு 600 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு

*தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு 1500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

*ஆடைத் தொழிற்சாலைகளினால் 4 பில்லியன்வருமானம் பெற்றாலும் புடவைகளை பெற்றுக்கொள்ள 2 பில்லியன் செலவு செய்வதால் தேவையான புடவைகளை நாட்டுக்குள் உற்பத்தி செய்ய நடவடிக்கை.

* தேசிய ஆடை உற்பத்தியில் பத்திக் ஆடை உற்பத்திகளை அதிகாித்து அதன் ஊடாக வெளிநாட்டு செலாவணியை பெற்றுக்கொள்ள விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.

*முச்சக்கரவண்டி ஊழியர்கள் அதிகரித்துள்ளனர், அவர்களின் பிரச்சினைகள் குறித்த நெருக்கடிகளை தீர்க்க முச்சக்கரவண்டி நலன்புரி ஆணைக்குழு உருவாக்கப்படும்.

* சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிறுவனங்களுடன் இணைந்து இலங்கையில் மருந்துவகைகளை உற்பத்திசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

* தொலைபேசி, இணையத் தடைகள் குறித்த முறைப்பாடுகள் குறைத்துள்ளன . சகல பகுதிக்கும் கிடைக்கும் விதமாக வேகமான இணைய தொடர்பாடலை உருவாக்கும் வேலைத்திட்டம் உருவாக்கப்படும். (ஜி-5) தொழிநுட்பம் சகல பகுதிகளுக்கும் வழங்கப்படும்.

பாராளுமன்றத்தில் தற்போது இடம்பெற்று வரும் 2022 ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் வரவு செலவு திட்டம் தொடர்பான உரையின் போது பசில் ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார.

அத்துடன் எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் தோட்ட லயன் குடியிருப்புக்களை அகற்றி தனி விடுகளை உருவாக்க 500 மில்லியன் ரூபாய் ஒதுக்க முன்மொழியப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

புதிய தொழிநுட்பத்துடன் கூடிய பெருந்தோட்டங்களை உருவாக்குவது எமது நோக்கமாகும். அரசுக்கு சுமையை ஏற்றாமல் ஏராளமானவர்கள் இத்துறைகளில் செயற்பட்டு வருகின்றனர்.

வரவு செலவு திட்டம் 2022 – நிதி அமைச்சர் மேலும் தெரிவித்த விடயங்கள்

எனவே குறிப்பிட்ட அமைச்சுகளும் திணைக்களங்களும் அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பார்கள் என நிதி அமைச்சர் தெரிவித்தார்.

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தற்பொழுது 10 மாதங்கள் வரை வழங்கப்படுகின்ற ரூபா 20,000 பெறுமதியான உணவுப் பொதியினை 2 வருடங்கள் வரை நீடித்து தொடர்ந்து வழங்குவதற்கு முன்மொழியப்படுவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கு 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

புதிய வியாபாரத்தை பதிவு செய்வதற்கு அறவிடப்படும் கட்டணத்தை 2022 ஆம் ஆண்டு அறவிடாதிருப்பதற்கு தீர்மானித்துள்ளோம்

விவசாயிகளை பாதுகாப்பதற்கு எங்களுடைய அரசாங்கம் முன்னின்று செயற்படும். விவசாய பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதற்கும் தேசிய விவசாயத்தை மேம்படுத்துவதற்கும் விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுப்போம்

புதிய காப்புறுதி திட்டங்களை ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் நிறுவனத்தின் ஊடாக முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்

சமுர்த்தி வங்கி முறையை அனைத்து சேவைகளையும் உள்ளடக்கிய ‘One Stop Shop’ நிறுவனமாக மாற்ற யோசனை