இன்று மற்றொரு கேஸ் சிலிண்டர் வெடிப்புச் சம்பவம்; அச்சத்தில் மக்கள்

Gas cylinder explosion Sri Lanka இன்றும் கேஸ் சிலிணடர் வெடிப்பு

நிக்கவரெட்டிய கந்​தேகெதர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில், இன்றுக்காலை (Gas cylinder explosion) கேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியது. இதனால், அவ்வீட்டுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் (Gas cylinder explosion) கேஸ் சிலிண்டர் வெடிப்பு என சந்தேகிக்கப்படுவதாக நிக்கவெரட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெடிப்பு காரணமாக ஏற்பட்ட தீயினால் வீடு பலத்த சேதமடைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

நவம்பர் மாதத்தில் மாத்திரம் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

உரிமையாளரும் அவரது மனைவியும் வயலுக்குச் சென்றிருந்ததாலும், மூத்த பிள்ளை பாடசாலைக்கு சென்றதாலும், இளைய பிள்ளை உறவினர் வீட்டில் வைக்கப்பட்டிருந்ததாலும் உயிர் சேதமோ காயமோ ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேஸ் சிலிண்டர் வெடிப்பு ஆபத்திலிருந்து பாதுகாப்புக்கான அறிவுறுத்தல்

வீடுகளில் வெடிக்கும் கேஸ் சிலிண்டர்- இன்றும் மற்றொரு வெடிப்பு சம்பவம்

எரிவாயு சிலிண்டர் தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் விஷேட அறிவிப்பு