கிண்ணியா சம்பவம் – நாமல் ராஜபக்ஷ கூறியுள்ள விடயம்; சஜித் கடும் கண்டனம்

Kinniya Ferry Accident - Today breaking news | கிண்ணிய செய்திகள்

Kinniya Ferry Accident – கிண்ணியாவில் இன்று காலை இடம்பெற்ற படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தனது அனுதாபங்களை வெளியிட்டுள்ளார்.

கிண்ணியாவில் இன்று காலை இழுவைப்படகு மூழ்கி விபத்திற்குள்ளானதில் பெருமளவானவர்கள் உயிரிழந்தனர்.

இதன் பிறகு கிண்ணியா பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களால் பதற்ற நிலை உருவானது.

அத்துடன், கிண்ணியா பிரதேச வியாபார நிலையங்கள் மூடப்பட்டு துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த நிலையில், விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் தளத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் அனுதாபம் தெரிவித்து பதிவொன்றினை இட்டுள்ளார்.

இன்றைய கிண்ணியா படகு விபத்து குறித்து அறிந்து நான் மிகவும் வேதனையுற்றேன் எனவும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்களை தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் அமைச்சர் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

 Kinniya Ferry Accident – கிண்ணியா படகு விபத்து – முந்தைய செய்தி

இதேவேளை கிண்ணியா குறிஞ்சாக்கேணி பாலத்தை புனரமைத்துத்தருமாறு கோரிக்கை விடுத்த வேளையில் விடயத்துக்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் கேலித்தனமாக கேவலமாக சிரித்தார்,

அந்த சிரிப்பின் விளைவாக பல உயிர்களை காவு கொடுத்துவிட்டோம் என சபையில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் ஆவேசப்பட்டார்.

அத்துடன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியில்லாது படகுப் பாதைக்கு அனுமதி வழங்கியது எவ்வாறு? இதற்கு யார் காரணம் என ரவூப் ஹகீம் மற்றும் இம்ரான் மஹரூப் ஆகியோர் கேள்வி எழுப்பினர்.

நாடாளுமன்றத்தில் இன்று (23) செவ்வாய்க்கிழமை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் சபை அமர்வுகள் கூடிய வேளையில் விசேட கூற்றொன்றை எழுப்பிய ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப், கிண்ணியா பிரதேசத்தில் படகு கவிழ்ந்த விவகாரம் குறித்து சபையில் கூற்றொன்றை முன்வைத்து இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது சபையில் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹகீம்,

பாலம் புனரமைக்க எடுக்கப்படும் முயற்சியை நாம் வரவேற்கிறோம். ஆனால் இடைப்பட்ட காலத்தில் எவருடைய அனுமதியும் இல்லாத வகையில் படகுப்பாதை சேவைகளை முன்னெடுத்ததன் விளைவாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது என்றார்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் கிண்ணியா அனர்த்தம் குறித்து கருத்து தெரிவிக்கையில், கிண்ணியா குறிஞ்சாக்கேணி அனர்த்தம் வருத்தமளிக்கிறது.

ஆறு பேர் உயிரிழந்துள்ளதாகவும், 11 பேர் காணமால் போயுள்ளதாகவும், மூவர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இன்றைய இலங்கை செய்திகள்

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு நட்டஈடு பெற்றுக் கொடுக்க வேண்டும். அத்துடன் குறித்த படகு சேவையின் செயற்பாடுகள் குறித்து விசாரணை நடத்தி உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும்.

உயிரிழந்தவர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார். Kinniya Ferry Accident