கொழும்பில் நட்சத்திர ஹேட்டலில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 07 பேர் செய்துள்ள செயல்

சமூக வலைத்தளம் மூலம் மோசடி - Today breaking news in Tamil

கொழும்பு – கொம்பனித்தெரு பகுதியில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கி பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வந்த 7 பேரை வலான மோசடி தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

குறித்த பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் கண்டி பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவர் என காவல்துறை தெரிவித்துள்ளது.

அத்துடன், கைது செய்யப்பட்ட ஏனைய சந்தேக நபர்கள் நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களை சேர்ந்த 35 முதல் 47 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் காவல்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தள செயலிகள் ஊடாக பொதுமக்களின் பணத்தை மோசடி செய்யும் நடவடிக்கைகளில் குறித்த குழுவினர் நாளாந்தம் ஈடுபட்டு வந்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக பணமோசடி குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தொடர மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அத்துடன், சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்கள் இது போன்ற மோசடியாளர்களிடம் சிக்காமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.