சம்பிக்க ரணவக்க தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

சம்பிக்க தொடர்பில் நீதிமன்ற உத்தரவு - Today news in Tamil

நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் கடவுச்சீட்டை விசா பெறுவதற்காக தற்காலிகமாக விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த முன்னிலையில் இன்று (14) மனுவொன்றை தாக்கல் செய்த பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் சட்டத்தரணிகள், தனது கட்சிக்காரர் பெப்ரவரி மாதம் வெளிநாடு செல்ல உள்ளதாகவும், தற்போது நீதிமன்ற காவலில் உள்ள அவரது கடவுச்சீட்டை தற்காலிகமாக விடுவிக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதி, குறித்த கடவுச்சீட்டை தற்காலிகமாக விடுவிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இளைஞன் ஒருவனை பலத்த காயமடையச் செய்த குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு பிணை வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அவரது கடவுசீட்டை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்தது.