வாகன சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு – சாரதி அனுமதி பத்திரம் இரத்தாகலாம்

சாரதி அனுமதி பத்திரம் ரத்தாகலாம் Today breaking news in Tamil

சாரதி ஒருவர் செய்யும் குற்றங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சாரதி அனுமதி பத்திரம் இரத்து செய்யப்படும் முறையொன்றும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர (Sarath Weerasekara) தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகரில் ட்ரோன் கெமராக்களை பயன்படுத்தி போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வேலைத் திட்டத்தை பார்வையிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன் போது, போக்குவரத்து குற்றங்களுக்கான தண்டப்பணம் செலுத்துவது தொடர்பில் புதிய தொழில்நுட்ப முறையொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலும் தண்டப்பணம் செலுத்தும் போது ஏதாவது ஒரு இடத்தில் தவறு செய்தால் தண்டப்பணம் செலுத்தி சாரதி அனுமதி பத்திரம் பெறுவதற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் எடுக்கும்.

5 அல்லது 6 நிமிடங்களில் சொந்த கிரெடிட் கார்ட்டினூடாக பணம் செலுத்தி அல்லது வேறு வழிகளில் சாரதி அனுமதிப்பத்திரத்தை மீளப் பெறுவதற்கான வழியை அறிமுகப்படுத்தவுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.