தப்லீக் ஜமாத் அமைப்புக்கு தடை – சமூகத்துக்கு ஆபத்து, பயங்கரவாதத்தின் நுழைவாயில்

தப்லீக் ஜமாத் அமைப்புக்கு தடை - Today breaking news in Tamil

இஸ்லாமியக் கருத்துகளை பரப்பி வரும் தப்லீக் ஜமாத் அமைப்புக்கு சவூதி அரேபியா தடை விதித்துள்ளது.

தப்லீக் ஜமாத் அமைப்பானது சமூகத்துக்கு ஆபத்தானது எனவும், பயங்கரவாதத்தின் நுழைவாயில் எனவும் சவூதி அரேபியா விமர்சித்துள்ளதாக ஏ.என்.ஐ. செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

இதேவேளை, தப்லீக் ஜமா அத், தாவா குழுவுடன் இணைந்து செயற்படுவதற்கு எதிராக மக்களை அறிவுறுத்துவதற்கு வெள்ளிக்கிழமை பிரசங்கத்தின்போது நெரம் ஒதுக்குமாறு பள்ளிவாசல்களுக்கு சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அவ்வமைச்சின் டுவிட்டர் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், சவூதி அரேபிய இஸ்லாமிய விவகார அமைச்சர் கலாநிதி அப்துல் லத்தீப் அல் அல்ஷேக், மசூதிகளில் உள்ள போதனை செய்பவர்களுக்கும், மசூதிகளுக்கும் பிறப்பித்த உத்தரவில், வெள்ளிக்கிழமை தொழுகையின்போது, அல் அஹ்பாப் எனச் சொல்லப்படும் தப்லிக் மற்றும் தவா குழுவுடன் மக்கள் பழகுவதை எச்சிரியுங்கள்’ எனத் தெரிவித்துள்ளார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

“சமூகத்துக்கு தப்லீக் ஜமாஅத்தால் ஆபத்து இருப்தால், பள்ளிவாசல்கள் மக்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும். தவறான வழிகாட்டல், தடம் மாறுதல், ஆபத்து போன்றவை இந்தக் குழுவால் இருக்கிறது. பயங்கரவாதத்தின் வாயில்களில் ஒன்றாக இக்குழு இருக்கிறது. சமூகத்துக்கு ஆபத்தான குழுவாக இருப்பதால், தப்லீக் தவா குழுவை சவூதி அரேபிய அரசு தடை செய்கிறது” என்றும்” சவூதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது.

தப்லீக் ஜமாஅத் அமைப்பில் உலகெங்கும் 35 கோடி முதல் 40 கோடி பேர் அங்கத்தவர்களாக உள்ளனர் என எமதிப்பிடப்பட்;டுள்ளது.