நிறுவனம் ஒன்றில் நடந்த பயங்கர அனர்த்தம் – பெண் ஒருவர் பலி

நிறுவனம் ஒன்றில் நடந்த அனர்த்தம் Today breaking news in Tamil

பிலிமத்தலாவ பிரதேசத்தில் உள்ள பிளாஸ்டிக் நிறுவனத்தின் மின்சார லிப்ட் உடைந்து விழுந்தமையினால் அந்த நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் படுயாமடைந்த மற்றுமொரு பெண் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் 26 வயதுடைய இளம் பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார். காயமடைந்த பெண்ணும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு வீதி பிலிமத்தலாவ என்ற இடத்தில் அமைந்துள்ள 3 மாடி கட்டடம் ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அங்கு நீண்ட காலமாக பிளாஸ்டிக் மற்றும் பொலித்தின் பைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றனர். அங்கு 400க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இருவரும் உற்பத்தி பிரிவில் பணியாற்றி வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.