இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம் – சுனாமி அபாயம்

நிலநடுக்கம் - இந்தோனேசியாவில் சுனாமி அபாயம் விடுப்பு

இந்தோனேசியாவின் மெளமரே என்ற பகுதியில் 7.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

கடலில் சுனாமி பேரலைகள் உருவாகக்கூடும் என பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தகவல் அளித்துள்ளது.

எனினும் இதனால் இலங்கைக்கு எந்தவித சுனாமி பாதிப்பும் இல்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

GMT நேரப்படி 0320 மணிக்கு புளோரஸ் கடலில் 18.5 கிலோமீட்டர் (11 மைல்) ஆழத்தில் Maumere நகருக்கு வடக்கே 100 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

“நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 1,000 கிமீ (600 மைல்) தொலைவில் அமைந்துள்ள கடற்கரைகளுக்கு அபாயகரமான அலைகள் சாத்தியமாகும்” என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் கூறியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.