ஜனாதிபதியின் விஷேட வர்த்தமானி – பாராளுமன்ற அமர்வுகள் நிறைவு

பாராளுமன்ற அமர்வு நிறைவு - Today breaking news in Tamil

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பாராளுமன்ற அமர்வு களை நிறைவுறுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான பாராளுமன்ற கூட்டத்தொடர் முடிவுறுத்துவதாக ஜனாதிபதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 70 ஆவது சரத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய ஜனாதிபதியினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, 2022 ஆம் ஆண்டுக்கான புதிய பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு மீள ஆரம்பமாகவுள்ளது.