உலக மக்களை எச்சரித்த பில்கேட்ஸ் – நிலமை மோசமாகிவிடுமாம்

பில்கேட்ஸ் உலக மக்களுக்கு எச்சரிக்கை - Today news in Tamil

ஒமிக்ரோன் வைரஸ் அதிவேகமாக பரவும் தன்மையை கொண்டிருப்பதால் டெல்டா வைரஸை போன்று பாதி அளவு பாதிப்பை ஏற்படுத்தினால் கூட நிலைமை மிக மோசமாகிவிடும்.

ஒமிக்ரோன் அலையால் ஒரு நாடு பாதிக்கப்படால் 3 மாதங்கள் வரை பாதிப்பு இருக்கும் என மைக்ரோசொப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் (Bill Gates ) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோவிட் பெருந்தொற்றின் மிகவும் மோசமான கட்டத்திற்குள் நுழைய இருக்கிறோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் ஒமிக்ரோன் வைரஸின் பரவல் மிகவும் கவலைத்தரும் வகையில் இருப்பதால் பொதுமக்களை எச்சரிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து பில்கேட்ஸ் மேலும் தெரிவிக்கையில்,

நாம் கோவிட் பெருந்தொற்றின் மிகவும் மோசமான கட்டத்திற்குள் நுழைய இருக்கிறோம். உலகம் முழுவதும் ஒமிக்ரோன் பாதிப்பு அதிவேகமாக உயர்கிறது.

எனக்கு நெருக்கமான நண்பர்கள் பலர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நான் எனது விடுமுறை திட்டங்கள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டேன்.

இதுவரை வரலாறு காணாத அளவுக்கு ஒமிக்ரோன் வைரஸின் பரவல் வேகம் இருக்கிறது. விரைவில் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் இந்த வைரஸ் பரவி விடும். ஆனால் இது எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று இன்னும் நம்மால் கூறமுடியவில்லை.