கொவிட் சுனாமி – 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விஷேட அறிவிப்பு

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எடுக்கவும் - Today breaking news in Tamil

கொரோனாவுக்கு எதிரான இரண்டு தடுப்பூசி டோஸ்களையும் பெற்றுக்கொண்ட 20 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ்  வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார்.

அதன்படி, இரண்டாவது தடுப்பூசியை 3 மாதங்களுக்கு முன்னர் பெற்றுக்கொண்டவர்கள் பூஸ்டர் டோஸைப் பெறமுடியும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பயணங்களை மேற்கொள்வதற்கு முன்னர் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன கோரிக்கை விடுத்துள்ளார்.

பூஸ்டர் டோஸ் எடுக்காமல் மக்கள் ஒன்று திரண்டால் இந்த வருட இறுதிக்குள் கொவிட் சுனாமி வரலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் மத்தியில் மீண்டும் ஆர்வம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.