பொது மக்கள் பணத் தாள்களை பயன்படுத்தும் போது அவதானம்

போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில் - Breaking news in Tamil

பண்டிகைக் காலங்களில் 1000 மற்றும் 5000 ரூபாய் போலி நாணயத் தாள்களை புழக்கத்தில் விடக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும், இது தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

மேலும், இந்த பண்டிகைக் காலத்தில் சந்தையில் பணம் செலுத்துதல் மற்றும் வாங்குதலின் போது நாணயத் தாள்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நாணயத் தாள்களின் அடர்த்தி மற்றும் பிற அடையாளங்களை வைத்து போலி தாள்களை எளிதில் அடையாளம் காண முடியும் என்றும் இந்தக் காலப்பகுதியில் பொதுமக்கள் பணத்தைப் பயன்படுத்தும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.