அமைச்சுக்கள், அரச நிறுவனங்களுக்கு பசில் ராஜபக்ஷ விடுத்துள்ள பணிப்புரை

அமைச்சுக்கள் மீது நிதி அமைச்சரின் அறிவிப்பு - News in Tamil

அமைச்சுக்கள், திணைக்களங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் செலவினங்களை மேலும் குறைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷ கேட்டுக் கொண்டுள்ளார்.

அது தொடர்பில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ அமைச்சரவை அந்தஸ்துள்ள அனைத்து அமைச்சர்களுக்கும் அறிவித்துள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள அரசாங்கத்தின் செலவுகளை முகாமைத்துவப் படுத்தும் மட்டுப்படுத்தல்களுக்கு மேலதிகமாக இவ்வாறு அரச நிறுவனங்களின் செலவுகளை குறைத்துக் கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பித்து அதன்மூலம் நிதியமைச்சர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

நாட்டின் பொருளாதார நெருக்கடியை கவனத்திற் கொண்டு செலவினங்களை குறைப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வரும் நிலையில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அமைச்சரவைப் பத்திரம் மூலம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.