இன்று முதல் கடைபிடிக்க வேண்டிய விடயங்கள் வௌியாகின

சுகாதார வழிகாட்டி வௌியாகின - Today breaking news in Tamil

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இன்று(01) முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை அமுலாகும் வகையிலான புதிய சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி ஐந்தாம் வகுப்புக்கு மேல் 50 சதவீத மாணவ கொள்ளளவுடன் மேலதிக வகுப்புக்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருமணம், பொது விழாக்கள் போன்றவற்றில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, உணவகங்கள், கடைகள், மருந்துக் கடைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் ஒரே நேரத்தில் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதன் திறனில் சுமார் 50% ஆகும்.

இனி வரும் நாட்களில் திருமண விழாக்களின் போது மண்டபத்தின் கொள்ளளவில் 50 வீதமானோர் இருப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தேவையற்ற பயணத்தையும், வீட்டை விட்டு வெளியே செல்வதையும் முடிந்தவரை கட்டுப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் போது, ​​சம்பந்தப்பட்ட போக்குவரத்து முறைகளில் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும்.

குளிரூட்டப்பட்ட வாகனங்களை ஏற்றிச் செல்லும் போது காற்றோட்டத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அனைத்து பயணிகளும் முகக்கவசம் அணிய வேண்டும்.

முறையான சுகாதார வழிகாட்டுதல்களின்படி பணியிடங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன. பொதுக்கூட்டங்கள், கூட்டங்கள் போன்றவை மறு அறிவிப்பு வரும் வரை கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளன.