அரசாங்கத்துக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்த விமல்

பொறுமை எல்லை மீறியுள்ளது - Today breaking news in Tamil

பொறுமை காத்த நாட்டு மக்களின் பொறுமை எல்லை மீறிக்கொண்டே செல்கின்றது. அமைச்சர்களை கண்டவுடன் ஹூ சத்தம் எழுப்புவதற்கு மக்கள் தயாராகிவிட்டனர் என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

ஹூவில் ஆரம்பித்து எங்குச் சென்று முடியப்போகிறது என்று தெரியாது என்றும் அவர் எச்சரித்தார்.

ஆகையால், அரசாங்க புள்ளிகளின் நலனுக்கு அவ்வளவு நல்லதல்ல. விரைவாக இறங்கி செல்வதே நல்லதாகும் என்றார்.

இல்லையேல், ஹூ சத்தமிட்டு கிண்டலடிப்பது மட்டுமன்றி மக்களின் குண்டாந்தடி தாக்குதல்களுடன் செல்லவேண்டிவரும் என்றும் எச்சரித்தார்.