முட்டை மற்றும் கோழி இறைச்சியில் ஏற்படவுள்ள மாற்றம்

முட்டை மற்றும் கோழி இறைச்சி விலை குறைவு - News in Tamil

முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலையை குறைக்க இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

முட்டை ஒன்றின் விலையை 2 ரூபாயிலும் கோழி இறைச்சியின் விலையை 50 ரூபாயிலும் குறைப்பதற்கு வர்த்தகர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளதாக கால்நடை, பண்ணை வளர்ச்சி மற்றும் பால் மற்றும் முட்டை தொழில் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய இன்று முதல் விலை குறைவடையவுள்ளதென அமைச்சு தெரிவித்துள்ளது.

கால்நடை தீவனத்துக்கான கோதுமை இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. அதன் ஊடாக மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் தெரிவித்துள்ளார்.