மின்வெட்டு தொடர்பில் முக்கிய அறிவிப்பை வௌியிட்ட மின்சார சபை

power cut today - மின்வெட்டு தொடர்பான முக்கிய அறிவிப்பு

நாட்டில் இன்றும்(08), நாளையும் மின்சாரத் தடை (Power cut today ) அமுலாக்கப்பட மாட்டாது என மின்சார சபை அறிவித்துள்ளது.

பல்வேறு காரணங்களுக்காக நாட்டில் இரவு வேளையில் மின்சாரத் தடை (power cut today ) ஏற்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகி இருந்தன.

எவ்வாறாயினும், எரிபொருள் கூட்டுத்தாபனத்தினால், இலங்கை மின்சார சபைக்கு உராய்வு எண்ணெய் வழங்கப்பட்டதையடுத்து, மின் துண்டிப்பு தீர்மானத்தை கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்றும், நாளையும் மின்விநியோகத்தடை ஏற்படுத்தப்பட மாட்டாது.

எனினும், வார நாட்களில் எவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தொடரபாக இதுவரையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.